Tuesday, March 30, 2010

வெண்பா(வை)


சைவர்களுக்கு திருவெண்பாவை;
வைணவர்களுக்கு திருப்பாவை;
நான் உனக்கோர் நூர்பாவை;
நீ என்னிரு விழிப்பாவை;
எனினும் நீயிலை எம்பாவை.

Friday, March 26, 2010

கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்..

பூவில் இனிக்கும் தேன் துளியாய், புல்லில் சிரிக்கும் பனி துளியாய்;
கண்டுகொண்டேன்.. உன் கண்ணில் கசிந்த காதலினை

Tuesday, March 23, 2010

Eureka...Eureka...

நீ அறிவியல் கண்டறியா
இரண்டாம் நிலவு,
மூன்றாம் binary,
நான்காம் பரிணாமம்,
ஐந்தாம் வேதம்,
ஆறாவது ocean,
ஏழாம் அறிவு,
எட்டாம் அதிசயம்,
ஒன்பதாம் திசை,
பத்தாவது கோள்,
பதினொன்றாம் அவதாரம்....

Monday, March 22, 2010

விண்வெளி அதிசயம்


சூரியனும் சந்திரனும் மிக அருகில், அதற்கு குடையாக இரு கரு வானவில் - உன் கண்கள்

படித்ததில் பிடித்தது

இரண்டு கண்களும் இரண்டு கண்களும் எதிர்பட்டுகொள்ள,
இரண்டும் குருடானபின் நடக்கும் நாடகம் "காதல்" --
மு.மேத்தா.

Thursday, March 18, 2010

வேலை நிறுத்தம்

உன்னை காணாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் செய்ய துடிக்கிறது என் இதயம்.

கணி(நீ)

கணினியின் மொழியை விட உன் கண்ணின் மொழி கடினமாக உள்ளது.

Wednesday, March 17, 2010

ஆக்சிஜன்

உலகிற்கு O2 கிடைப்பது பச்சை மரங்களிலிருந்து,
எனக்கு மட்டும் உன் i2 விலிருந்து

கிரஹபிரவேசம்

புது மனை புகுவிழா எப்பொழுது?
உன் நினைவலைகள் என்னுள் கட்டிய மணல் வீட்டிற்கு...

அஹிம்சை

கத்தியின்றி, ரத்தமின்றி இதய மாற்று சிகிச்சை - காதல்.
இது அஹிம்சைதான், அனால் சில நேரம் இம்சை.