Wednesday, April 21, 2010

கண்ணீர்

நீந்த தெரியாத என் கண்களை
நீ ஏன் கடலில் விட்டாய்...

Sunday, April 18, 2010

இதயம்


ஏனென்று தெரியவில்லை, இருமடங்காய் துடிக்கிறது என் இதயம்;

உனக்கும் சேர்த்துதானோ?

Sunday, April 11, 2010

ஐந்திணை

முல்லையில் பூத்த குறிஞ்சியே - நீ
என் பாலையில் காதலை நெய்த(ல்)லால் - நான்
மருதமாய் சிவக்கின்றேன் உன் நெற்றியில்...

Wednesday, April 7, 2010

குழல் இனிது

புல்லாங்குழல் மட்டுமல்ல,
உன் கார் குழலும் இசை தரும்.
காற்று பயணித்தால்...