தமிழ் கொண்ட காதல்..
சோழ நாடு, ராஜராஜ சோழனின் அரண்மனை.
கூடியது சபை..இது அரசவை அல்ல..சொல் ஆடும் சொற்சபை ..தமிழ் ஆடும் கவிச்சபை.
கவிச்சொல் கம்பர், வில்லோடும் சொல்லால் போர் செய்யும் ஒட்டகூத்தர்
உட்பட சோழ நாட்டின் கவிகள் கூடினர் ஒன்றாக...
கம்பர் இயற்றிய நூல் அரங்கேற்ற விழா..
ராஜராஜனின் கண்களில் பெருமிதம்
தமிழ் தாய் தன் பிள்ளைகளுடன் ஒரு சேர தன் அரண்மனையில் வீற்றிருபதாய் உணர்ந்தான்.
தொடங்கினார் கம்பர் தன கவி சேவையை....
"..................................................................
...................................................................
..............................தேன் துமி தெரித்தது"
என்று தன பாடலை முடித்தார்.
ஒரு சேர வாழ்த்தினர் கவிகோ அனைவரும்.
மந்திர புன்னகையுடன் எழுந்தார் ஒட்டகூத்தர்
கவிதையில் சந்தேகம் உள்ளதென்றார்.
"துமி" என்னும் சொல் தமிழில் உள்ளதா? அது தமிழ் சொல் தானா? என் வின எழுப்பினார்.
அமைதியானது சபை, கம்பரின் பதிலை எதிபார்த்தது ஒட்டகூத்தர் மட்டுமல்ல ...
வினாவின் நுட்பம் புரிந்து கம்பரை எதிர் நோக்கினான் ராஜராஜன் .
"துமி" என்பது தமிழ் சொல்தான், அதன் பொருள் "துளி" என்று பதிழுரைத்தார் கம்பர்.
என்றாலும் மேற்கோள் காட்ட பிற எழுது சுவடி ஏதும் இல்லாமல் திணறினார்.
ராஜ ராஜனின் விருப்பபடி கம்பரும் ஓட்டகூத்தரும் "துமி" என்னும் சொல் பேச்சு வழக்கில் உள்ளதா? என அறிய பயணித்தனர் ஊர் ஊராக
ஒரு ஆலமரத்தடியில் இரு விவசாயிகள் பேசிக்கொண்டிருந்தனர் இவ்வாறு
"இந்த மாதம் ஒரு துளி மழை கூட இல்லையே ! "
இவர்கள் துளி என்றுதான் சொன்னார்களே தவிர "துமி" என்று ஒட்டகூத்தர் அகமாகிழ்ந்தார் ,
தான் வென்றதாக பெருமைகொண்டார்.
இருவரும் இன்னும் சிறிது தூரம் நடந்தனர்.
கம்பனின் சொல் பொய்யாக கூடாதென விரும்பினாள் கலைவாணி, கல்வியின் அதிபதி.
யாதவ குல பெண்ணாக உருவெடுத்தாள்...நான்கு வயது பாலகனின் தாயக மாறியிருந்தாள்
கவி சக்ரவர்த்திகள் வரும் வழியில் அமர்ந்தாள்.
ஏழு ஸ்வரங்களை இசைக்கும் கைகளில் தயிர் கடையும் மத்து கொண்டிருந்தாள்,
பானை நிறைய தயிர் கொண்டு ஆளுயர மத்து வைத்து கடைந்துகொண்டிருந்தாள்,
குறும்பு பாலகன் தயிர் பானையை சுற்றி விளையாடி வந்தான்.
கம்பரும் ஓட்டகூத்த்ரும் தம்மை நெருங்கும் வேளையில்
தன் மகனிடம் உரக்க உரைத்தால் இப்படி
"கண்ணா, அருகில் வராதே, மோர் துமி தெறிக்கும்" என்று
ஓட்டகூத்தருக்கு புரிந்தது "மோர் துளி" என்பதைத்தான் இப்பெண் "மோர் துமி" என சொல்வதாக
கம்பனின் தமிழ் பொய்யாகாது என் புரிந்தது.
கம்பரை உளமார பாராட்டினார்.
இங்கே நாம் பார்த்தது தமிழ் மீது கம்பன் கொண்ட காதலை அல்ல...கம்பன் மீது தமிழ் கொண்ட காதலை.
Monday, June 7, 2010
Wednesday, April 21, 2010
Sunday, April 18, 2010
Sunday, April 11, 2010
Wednesday, April 7, 2010
Tuesday, March 30, 2010
Subscribe to:
Comments (Atom)